Latestமலேசியா

மாராவை அனைத்து இனங்களுக்கும் திறந்துவிடச் சொன்னேனா? – சிவராசா

ஷா ஆலாம், ஜூலை.21- Mara எனப்படும் அமானா ராக்யாட் மன்றத்தை எல்லா இனத்தவர்களுக்கான மன்றமாக்கவும், MRSM மாரா அறிவியல் தொடக்கக் கல்லூரியின் பெயரை மலேசிய அறிவியல் தொடக்கக் கல்லூரி என மாற்றவிருப்பதாகவும் தாம் எண்ணம் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மையல்ல என புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் சிவராசா ராசையா மறுத்துள்ளார்.

மாறாக, நடப்பில் உள்ள MRSM-சில் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்துதான் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் சொன்னார். அந்த இட ஒதுக்கீடு இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று Mara குறிப்பிட்டதை அடுத்தே அது குறித்து பேசினோம் என்றார் அவர்.

இதைத் தவிர, Mara-வை அல்லா இனத்தவருக்கும் திறந்துவிடும்படியும், MRSM-மின் பெயரை மாற்றும்படியும் எந்த விவகாரமும் பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Mara தலைமையகத்தில் சிவராசாவுசன் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர்தான் இப்படியொரு வதந்தியைப் பரப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker