Latestமலேசியா

இடைத்தேர்தல்: பக்காத்தானை வீழ்த்த தே.மு. தீவிரம்

ஷா ஆலம் ஜூலை. 22- சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை இந்தத் தொகுதியில் பாஸ்கட்சி போட்டியிடவில்லை என்பதால் பக்காத்தான் ஹராப்பானுடனான நேரடி மோதலில் கூடுதலாக வாக்குகளை ஈர்க்க முடியும் என்று தேசிய முன்னணி கருதுகிறது.

தேசிய முன்னணி சார்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நோர் போட்டியிடுகிறார். பிகேஆர் சார்பில் தஃபிஸ் சமயப்பள்ளி தலைவர் ஷாவாவி அகமட் போட்டியிடுகிறார்.

கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலின் போது சுங்கை கண்டிஸில் பிகேஆர் வேட்பாளர் மாட் சுஹைமி 23,998 வாக்குகள் பெற்றார். தேசிய முன்னணி வேட்பாளர் 11,518 வாக்குகளும் பாஸ் வேட்பாளர் 7,573 வாக்குகளும் பெற்றனர்.

இம்முறை பாஸ்கட்சி போட்டியிடாததால் தாங்கள் கூடுதல் வாக்குகளை பெறுவோம் என்று தேசிய முன்னணி கூறியது. அதேவேளையில் கடந்த முறை 12,480 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பி.கேஆர் தற்போது அதனை தக்க வைக்க போராடும் .

அண்மையில் மாட் சுஹைமி காலமானதை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையே இத்தொகுதியில் வெளிப்படையிலான ஒத்துழைப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker