Latestமலேசியா

மணப்பெண் ஆனாள் 13 வயது சிறுமி!

திரங்கானு,ஜூலை.22- அண்மையில் 11 வயது சிறுமிக்கும் 41 வயது ஆடவனுக்கும் நடந்த திருமணத்துக்கு எதிரான எதிர்ப்பு அலைகளே இன்னும் ஓயவில்லை. அதற்குள், மேலுமொரு சிறுமி மணமகள் ஆன விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி, கம்போங் புலாவ் நிபோங்கில், திரங்கானுவைச் சேர்ந்த 19 இளைஞனுக்கு கிளந்தானைச் சேர்ந்த 13 வயது சிறுமி மனைவியாகி இருக்கிறாள்.

தகுந்த ஆவணங்களுடன், திருமணத்திற்கு சாட்சியாக சிறுமியின் உறவுக்காரரும் இருந்ததால், அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததாக 67 காதியான இப்ராஹிம் ஹூசேன் கூறினார். பின்னர் அவர்களது திருமணத்தை இஸ்லாமிய நாராத்திவாச் சமய மன்றத்தில் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகச் சொன்னார்.

திருமணத்தை நடத்தி வைத்ததோடு தனது கடமை முடிந்து விட்டதாகவும், அதற்கு மேல் அவர்கள் தங்களின் திருமணத்தை பதிவு செய்தார்களா என்று தனக்கு தெரியாதென இப்ராஹிம் கூறியுள்ளார். 12-இல் இருந்து 16 வயதுக்குட்பட்ட எத்தனையோ பெண்களுக்கு தான் திருமணம் செய்து வைத்துள்ளதாகக் கூறிய இப்ராஹிம், ஷாரியா சட்டப்படி இது தவறல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராம மக்களுக்கு இது புதிதல்ல. இதனால் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker