Latestஇந்தியா

ஆக.19.இல் தி.மு.க தலைவர் ஆகிறார் ஸ்டாலின்.

சென்னை, ஜூலை. 23- இனி தி.மு.க தலைவர் கருணாநிதியால் சுறுசுறுப்பாக இயங்க இயலாது என மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளதால் குழப்பத்தை தவிர்க்கவும் கட்சியை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அடுத்த மாதம் 19ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி தலைவர் பதவியை ஏற்கவிருக்கிறார். அத்துடன் திமுக மாநில நிர்வாகிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு 2016 டிசம்பர் 15 -இல் மருத்துவமனை பரிசோதனையில், நுரையீரல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு “டிரக்கியோஸ்டமி” என்ற சுவாச கருவியும் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இம்மாதம் 18ஆம் தேதி மறுபடியும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார் கருணாநிதி. மருத்துவ பரிசோதனையில் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்,

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின்,. அழகிரி, செல்வி தமிழரசு உட்பட குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் கோபாலபுர வீட்டில் ஒன்று கூடி முக்கிய ஆலோசனைகள் நடத்தி உள்ளனர். இந்நிலையில் அடுத்த மாதம் 19ஆம் தேதி திமுக பொதுக் கூழுக் கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker