Latestமலேசியா

“இது நீதிமன்றம்! கோப்பிக் கடையல்ல! – ஜமாலுக்கு நீதிபதி எச்சரிக்கை!

கோலாலம்பூர், ஜூலை. 23- நீதிமன்றத்தில் ஆதாரம் இல்லாமல் யார் மீதும் பழி சுமத்தக் கூடாது என்று ‘சிவப்பு சட்டை’ இயக்கத்தின் தலைவரும், சுங்கை பெசார் அம்னோ கிளைத் தலைவருமான டத்தோஶ்ரீ ஜமால் யூனோஸிற்கு உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

ஜமாலுக்கு எதிராக பெர்சே 2.0 இயக்கத்தின் முன்னாள் தலைவர் மரியா சின், தொடுத்துள்ள மானநஷ்ட வழக்குத் தொடர்பிலான விசாரணையின் போது, ஜமாலின் கருத்துகள் ஆதாரங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று நீதிபதி டத்தோ முகமட் ஸாகி பலமுறை நினைவுறுத்தினார்.

“இது நீதிமன்றம். இங்கு இஷ்டப்படி, ஆதாரங்கள் இல்லாமல் கருத்துகள் வெளியிடப் படக் கூடாது” என்று ஜமாலை நீதிபதி முகமட் ஸாகி எச்சரித்தார்.

காப்பி கடைகளில் பேசுவதைப் போல, நீதிமன்றத்தில் யாரும் கருத்து கூற முடியாது. ஆதாரங்கள் இல்லாத கருத்துகள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப் படாது என்று நீதிபதி தெரிவித்தார்.

பெர்சே 2.0 இயக்கம், சங்கங்களின் பதிவாளரால் பதிவு செய்யப் படவில்லை என்று தாம் சிலரின் மூலம் தெரிந்துக் கொண்டதாக ஜமால் நீதிமன்றத்தில் கூறினார். அதற்கான ஆதாரத்தை காண்பிக்க முடியாத பட்சத்தில், ஜமால் அப்பழிகளைச் சுமத்தக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

தமது அக்கருத்துகளை நிரூபிக்க தம்மிடம் ஆதாரம் ஏதும் தம்மிடம் தற்போது இல்லை என்று ஜமால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பெர்சே இயக்கத்தில் ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று ஜமால் யூனுஸ் தெரிவித்துள்ள கருத்து, அவதூறு தன்மை கொண்டது என்ற அடிப்படையில், ஜமாலுக்கு எதிராக மரியா சின் மானநஷ்ட வழக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker