Latestமலேசியா

எனது முந்தைய ஆட்சியில் கடன் இவ்வளவு இல்லை! –பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை.23- 1980-ஆம் மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில், தாம் ( பிரதமராக பொறுப்பேற்றிருந்த போது, தாம் ஜப்பான் நாட்டிலிருந்து சிறு தொகையை மட்டுமே கடனாக பெற்றிருந்ததாகவும், அப்போது தேசிய கடன் அவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலக்கட்டத்தில் நாட்டின் கடன் தொகை ரிம.300 பில்லியனாக இருந்ததாகவும், அதனை அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் உறுதிப் படுத்தும் என்றும் மகாதீர் கூறினார். அதுமட்டுமல்லாது, அப்போது, ஜிடிபி எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 விழுக்காடாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

“நான் 22 ஆண்டுகள் பிரதமராக பொறுப்பேற்றிருந்தேன். நாட்டின் நிதி வளர்ச்சி மற்றும் கடன் தொகை குறித்த விவரங்கள் எனக்கும் தெரியும். நாட்டின் கடன் தொகை ஒரே சமயத்தில் ரிம.42 பில்லியனாக அப்போது அதிகரித்ததில்லை. தேசிய கடன் தொகை டிரில்லியனுக்கு உயர்ந்ததில்லை” என்றார் அவர்.

“ட்ரியல்லனை விட ரிம.300 பில்லியன் அதிகம் என்பது போல் சிலர் கருத்துரைப்பதைக் கண்டு ஆச்சரியப் படுகிறேன்” என்று மகாதீர் சொன்னார்.

ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து ‘யென்’ கிரெடிட்டில் மலேசியா கடன் பெற்றால், 1990-ஆம் ஆண்டில் நாடு சந்தித்த நிதி நெருக்கடியை, மீண்டும் சந்திக்கக் கூடும் என்று பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, மகாதீர் அவ்வாறு பதிலளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker