Latestமலேசியாவிளையாட்டு

சுக்மாவில் சிலம்பம் மீண்டும் இடம்பெறுமா?

கோலாலம்பூர், ஜூலை.23- 2020-ஆம் ஆண்டு ஜொகூரில் நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தைக் கொண்டுவர வேண்டும் என மலேசிய சிலம்ப பொற்கலை மன்றம் பக்காத்தான் ஹராப்பான் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுக்மாவில் நீண்ட காலமாக இடம்பெறாமல் இருக்கும் சிலம்பம் கலைக்கு மீண்டும் அங்கீகாரத்தை வழங்குமாறு அம்மன்றத்தின் தலைவர் என்.முரளிதரன் இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சடிக்கிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு திரங்கானுவில் நடைபெற்ற சுக்மாவில், சிலம்பம் கலை அரங்கேறியது. அதை தொடர்ந்து, 2010-இல் மலாக்காவிலும், 2013-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற சுக்மாவில் சிலம்பம் போட்டிகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், சிலம்பக் கலைச் சங்கத்தில் நிகழ்ந்த உட்பூசலால் அந்த விளையாட்டு சுக்மாவில் இருந்து நீக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரைக்கும் அவ்விளையாட்டு சுக்மாவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என முரளிதரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிலம்பம் இந்தியாவில் இருந்து வந்த ஒரு தற்காப்புக் கலை என்றாலும், மலேசியாவில் மலாய், சீன அன்பர்களும் அக்கலையை ஆர்வமுடன் கற்றுக் கொள்வதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker