Latestமலேசியா

நாடாளுமன்றத்தில் நஜிப்புக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

கோலாலம்பூர், ஜூலை.23- நாடாளுமன்றத்தில் மக்களவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அதன் இடைவெளி நேரத்தின்போது முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மிதமான அளவில் கொண்டாடப்பட்ட அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், அம்னோ தேசியத் தலைவர் ஸாஹிட் ஹமிடி உட்பட தேசிய முன்னணி தலைவர்கள் சிலர் வந்திருந்தனர். நடிகையும் இயக்குநருமான எலி சுரியாத்தி ஒமாரும், பெர்சாத்து கட்சியி முன்னாள் உறுப்பினர் அனினா சாடூடினும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரே மலேசிய சின்னம் போட்ட கேக்கில், “நன்றி டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்” என்று எழுதப்பட்டிருந்தது. கேக் வெட்டப்பட்டதும், நஜிப்புக்கு ‘TQ Sir’ எனும் இசைக் காணொளி காட்டப்பட்டது. அந்த பாடல் வரிகளில் மனம் நெகிழ்ந்து போன நஜிப் “இது எனது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றார்.

இதனிடையே, தமது கணவர் ஒரு நேர்மையான மனிதர் என்றும், அவர் மீது தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் அன்பு வைத்திருப்பதாகவும் ரோஸ்மா கூறினார். நஜிப்புக்கு அனைத்துமே சிறப்பானதாக அமைய வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

பகாங், கோலா லிப்பிசில், 1953-ஆம் ஆடு ஜூலை 23-ஆம் தேதி துன் அப்துல் ரசாக்குக்கும், தோ புவான் ராஹாவுக்கும் மூத்த மகனாக நஜிப் பிறந்தார். அவருக்கு இன்றோடு 65 வயது பூர்த்தியாகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker