Latestமலேசியா

வாக்களிக்கும் வயதைக் குறைக்க அரசு தீவிரம் காட்டுகிறது- சைட் சடிக்

கோலாலம்பூர், ஜூலை.23- அடுத்த பொதுத் தேர்தலுக்குள் வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18-ஆக குறைக்கும் விவகாரத்தை அரசாங்கம் மிகத் தீவிரமாக பரிசீலித்து வருவதாக இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் தெரிவித்தார்.

இது தொடர்பில் எந்தச் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தைக் கேட்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் வயது வரம்பை 18-ஆக குறைப்பதால் வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாக 3 கோடியே 70 லட்சம் அதிகரிக்கும். அதிலும், இளைஞர்கள் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பர். நாட்டில் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் இளைஞர்களின் பங்கு இதனால் வலுப்பெறும் என அமைச்சர் கூறினார்.

14-ஆவது பொதுத் தேர்தலின்போது அநியாயங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்த இளைஞர்களின் எழுச்சியே நாட்டில் 60 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியை படுதோல்வி அடையக் காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker