Latestஇந்தியா

நடிகை ஸ்ரீரெட்டியைச் சாடுகிறார் பாரதிராஜா!

சென்னை. ஜூலை. 23- நடிகை ஸ்ரீரெட்டி இடம் கொடுக்காமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என இயக்குநர் பாரதிராஜா குற்றச்சாட்டியுள்ளார். ஆந்திரா சினிமா வட்டாரத்தை தாக்கிய நடிகை ஸ்ரீரெட்டியின் கோபம் தற்சமயம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி இருக்கிறது.

அடுக்கடுக்காக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பலரும் மௌனமாக இருக்கிறார்கள். வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டவர்களின் ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் இதற்கு தமிழ்த் திரையுலகம் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது: ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? இவர் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கையில், அதனை வைத்து இவர் விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது. இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை குறை சொல்லக்கூடாது எனக் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker