Latestஉலகம்

3ஆம் உலகப் போரை உருவாக்கப் போகும் சிறிய நாடு எது? – டிரம்ப்

வாஷிங்டன், ஜூலை.23- ஐரோப்பிவில் உள்ள மிகச் சிறிய நாடான மொண்டேநெக்ரோ தான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘பகீ’ர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஐரோப்பிய கண்டத்தில் குரேஷியா, செர்பியா, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள சிறிய நாடு மொண்டேநெக்ரோ. இங்கு 6 லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர். இந்நாடு சமீபத்தில் நேட்டோ குழுவில் 29 ஆவது நாடாக இணைந்தது.

நேட்டோ குழு என்பது 29 நாடுகளை கொண்டதாகும். இந்தக் குழுவில் உள்ள எந்தவொரு நாட்டின் மீதும் வேறு நாடு தாக்குதல் நடத்தினாலோ அல்லது போர் தொடுத்தாலோ இந்தk குழுவில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து அந்த நாட்டின் மீது போர் தொடுக்கும். இதனால் இந்தக் குழு மிகவும் வலுவானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பேட்டி ஒன்றில் கூறுகையில், நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்தக் குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட, மற்ற எல்லா நாடுகளும் போருக்கு தயாராகிவிடும்.

இதனால் அந்த குழுவில் ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற நாடுகள் போரை உருவாக்கும். மேலும் நேட்டோவில் இருப்பதிலேயே மிகவும் மூர்க்கமான நாடு மொண்டேநெக்ரோ தான். அதில் குறைவான மக்கள் இருந்தாலும் எல்லோரும் மிகவும் மூர்க்கமாக இருக்கிறார்கள்

இதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போரை உருவாக்க காரணமாக இருக்கலாம். அந்நாடு மூன்றாம் உலகப்போரை உருவாக்கும் நாடாக விளங்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker