Latestமலேசியா

‘கிக்கி சேலஞ்ச்’ நடனம்: பாதுகாப்புக்கு மிரட்டல்! -(video)

கோலாலம்பூர்,ஜூலை.24- சமீப காலமாக ‘கிக்கி சேலஞ்ச்’ (Keke Challenge) எனும் நடனம் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. ‘இன் மை ஃபீலிங்’ (In My Feeling) என்ற பாடலுக்கு ஓடும் காரிலிருந்து இறங்கி நடனம் ஆடிவிட்டு, பின்னர் மீண்டும் காருக்குள் வந்து அமர்வதே இந்தப் போட்டி ஆகும்.

இளைஞர்கள் மட்டுமல்லாது சில பிரபலங்களும் தங்களது ‘கிக்கி சேலஞ்ச்’ நடன காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். ‘கிக்கி சேலஞ்ச்’ நடனம் என்ற பெயரில் சாலை பகுதிகளில் நடனமாடுவதை நிறுத்துமாறு போலீசார் பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை தலைநகரில் இந்த வகை நடனத்தால் விபத்து ஏற்பட்டதாக எந்த புகாரும் பெறப்படவில்லை. இருப்பினும், அவ்வாறு ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடுபவருக்கு காயங்களும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் தங்களது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கோலாலம்பூர் புலனாய்வு, போக்குவரத்து அமலாக்கப் பிரிவுத் தலைவர் சுல்கிப்லி யாஹ்யா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker