Latestமலேசியா

சபாவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 1,791-ஆக உயர்வு

கோத்தா கினாபாலு,ஜூலை.24- கடந்த ஜூலை 21-ஆம் தேதி வரை சபாவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 1,791-ஆக அதிகரித்ததாக சபா சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் கிரிஸ்டினா ருண்டி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில், டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 1,125 ஆக இருந்தது. ஆனால், கடந்தாண்டை ஒப்பிடுகையில், கூடுதலாக 666 சம்பவங்கள் பதிவாகியதாக அவர் கூறினார்.

கோத்தா கினாபாலுவில் 491 சம்பவங்களும் தாவாவில் 357 சம்பவங்களும் குனாக்கில் 202 சம்பவங்களும் லாஹட் டாத்துவில் 178 டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்றார் அவர்.

பொதுமக்கள் எப்போதும் தங்களது குடியிருப்புப் பகுதியும் சுற்றுப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கிரிஸ்டினா வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker