Latestமலேசியா

ஜூனியர் டாக்டர்கள் பகடிவதையா? ஹாட் லைனில் புகார் செய்க! – MMA

ஜார்ஜ்டவுன், ஜூலை. 24- புகார்கள் செய்வதற்காக கடந்த ஆண்டில் அமைக்கப்பட்ட 24 மணிநேர ஹாட்லைன் சேவையை, பகடிவதைக்கு உள்ளாகும் ஜுனியர் டாக்டர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எம்எம்ஏ எனப்படும் மலேசிய மருத்துவ சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

‘ஹெல்ப்டோக்’ (Helpdoc) எனப்படும் அந்த 24 மணிநேரப் புகார்ச் சேவைக்கு கிடைத்துள்ள புகார்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது கருத்துக் கணிப்பு மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள் முரணாக இருப்பதாக சங்கத்தின் தலைவர் முகம்மட் நமாஷி இப்ராகிம் தெரிவித்தார்.

மூத்த டாக்டர்களால் ஜூனியர் டாக்டர்கள் பலர் பகடிவதைக்கு ஆளாகி வருவது மிகக் கடுமையாக அதிகரித்து இருப்பதாக டோப்ஸ் என்ற இணைய ஆய்வு அமைப்பின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பில் 16,000க்கும் அதிகமான டாக்டர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கு கொண்டவர்களில் 80 விழுக்காட்டினர் தாங்கள் மூத்த டாக்டர்களிடம் பகடி வதைக்கு ஆளாவதாக கூறியுள்ளனர்.

இவர்களில் 71 விழுக்காட்டினர், பகடிவதைக்கு உள்ளாகும் அறிகுறியை மிகக் கடுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களில் 17 விழுக்காட்டினர் இத்தகைய பகடிவதை காரணமாக தங்களுக்கு தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டது உண்டு எனக் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்புத் தகவல் குறித்து மலேசிய மருத்துவர் சங்கம் மிகுந்த கவலை அடைவதாக அதன் தலைவர் முகம்மட் நமாஷி கூறினார். இத்தகைய சங்கடங்களுக்கு உள்ளாகும் ஜூனியர் டாக்டர்கள், ஹாட்லைனில் புகார் செய்ய முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அப்படி புகார் செய்பவர்களின் அடையாளங்கள் ஒருபோதும் வெளியிடப் படமாட்டாது. அவர்களின் பிரச்னைகள் குறித்து அவர்கள் பயிற்சி பெறும் மருத்துவமனைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் மூலம் அணுகித் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker