Latestஉலகம்

பிரிட்டீஷ் பிரதமர் வீட்டின் முன் தமிழர்கள் மறியல்!

லண்டன், ஜூலை.24- இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரத்தின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக பிரிட்டன் பிரதமர் திரேசா மே இல்லத்திற்கு முன் ஒன்று கூடி தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திரளான பிரிட்டன் தமிழர்கள் பங்குகொண்டு மறியல் நடத்தியதுடன் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினர். புலிக்கொடி ஏந்திய வண்ணம் தமிழ் இனப் படுகொலைக்காக நீதி கோரி முழக்கமிட்டனர்.

அதேவேளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மிகப் பெரும் வரலாற்றுக் கடமை உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக நின்று அனைத்துலகின் மனசாட்சியைத் தட்டுவோம். நமக்கான நீதியையும் உரிமையையும் பெறும் வரை ஓயக்கூடாது என்று அங்கு திரண்ட பிரிட்டன் தமிழர்கள் சபதம் எடுத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker