Latestமலேசியா

ஸாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப இந்தியா கோரவில்லை – புக்கிட் அமான்

கோலாலம்பூர், ஜூலை.24- இஸ்லாமிய போதகர் டாக்டர் ஸாகிர் நாயக்கை மீட்க இந்திய அரசாங்கம் எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை என புக்கிட் அமான் போலீசின் சட்டப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

புக்கிட் அமான் போலீசின் சட்டப் பிரிவின் சார்பில் ஏசிபி முகமட் ஃபாஹ்மி விசுவநாதா அப்துல்லா கையெழுத்திட்டிருந்த அந்த உறுதிக் கடிதத்தை வழக்கறிஞர் முகமட் கைரூல் அஸாம் அப்துல் அஸிஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தியா அரசு ஸாகிரை மீட்க எந்த சட்டப்பூர்வ முயற்சியும் செய்யாத வரையில், அவ்விவகாரம் குறித்து நாம் பேசுவது அடிப்படையற்றதென கைரூல் அஸாம் கருத்துரைத்துள்ளார்.

முன்னதாக, ஸாகிரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அரசாங்கத்துக்கு நெருக்குதல் அளித்ததை அடுத்து, அந்த விவகாரம் நாட்டில் விஸ்வரூபமாகியது. இந்திய அரசின் கோரிக்கைக்கு மதிப்பளிக்குமாறும், ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்றும் ராமசாமி கூறியிருந்தார்.

அதற்கேற்றாற்போல, கடந்த ஜனவரியிலேயே ஸாகிரை திருப்பி அனுப்புமாறு மலேசிய அரசாங்கத்திடம் கேட்டுவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஶ்ரீ ரவீஷ் குமார் கடந்த ஜூலை 13-ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய நெருக்குதல்களுக்கு மத்தியில் ஸாகிர் எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தாத வரையில் அவரை இந்தியாவுக்கு அனுப்பப் போவதில்லையென பிரதமர் துன் மகாதீர் சூளுரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker