Latestசினிமா

ஸ்ரீரெட்டியை விபசார வழக்கில் கைது செய்க! -நடிகர் போலீஸ் புகார்

சென்னை, ஜூலை.24- பாலியல் புகார் பல கூறி, நடிகை ஸ்ரீரெட்டி எதிராக வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். பணம் பறிக்கவே அவர் முயற்சிக்கிறார். சமூகத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகவே அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளதாக நடிகர் வாராகி கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகத்தை தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி. தமிழில் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த். ராகவா, ஆதி உள்ளிட்டோர் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டு போகிறார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது விபசார பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகரும் சமூக ஆர்வலருமான வாராகி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஸ்ரீரெட்டி திரையுலகை மிரட்டி பணம் பறித்தார் என்பது பலரும் அறிந்தது. அவர் தானாக முன்வந்து தான் பட வாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்கள்- இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார். இது எந்த வகையிலும் ஏமாற்று ஆகாது. அவரது செயலுக்கு அவர் பணம் வாங்கினாரா, இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.

அவரே பலருடன் பாலியல் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ஏறக்குறைய விபசாரத்திற்கு ஈடானதாகும். எனவே, அவர் மீது விபசார தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என நடிகர் வாராகி போலீசில் புகார் செய்தார்.

அதோடு தெலுங்கு திரையுலகைப் போலவே தமிழிலும் அவர் பாலியல் புகார் கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது. ஆகவே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker