Latestமலேசியா

5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பாலியல் குற்றச்செயல்கள் – கஸ்தூரி பட்டு

கோலாலம்பூர், ஜூலை.26- நாட்டில், 2013-ஆம் ஆண்டில் இருந்து இவ்வாண்டு மே மாதம் வரையில் பாலியல் பலாத்காரம், முறை தவறிய உறவு, பாலியல் தொல்லை, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு, குடும்ப வன்முறை ஆகிய பாலியல் குற்றச்செயல்களை உட்படுத்தீ 50,658 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் புள்ளிவிவரம் காண்பிக்கின்றது.

இவ்வாண்டு ஜனவரில் இருந்து மே மாதம் வரையில் மட்டும் 3,439 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மக்களவை அமர்வின்போது பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டிருந்தார். 15 பக்கங்களை உள்ளடக்கிய அந்த எழுத்துப்பூர்வ பதிலின் பிரதிகளை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்திருந்தார். வெறும் 3 கோடி மக்கள் தொகையில், இவ்வளவு பாலியல் தொடர்பான குற்றச்செயல்கள் பதிவாகியிருப்பது வேதனை அளிப்பதாக கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்து பதிவும் செய்திருந்தார்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டும் இந்த சம்பவங்கள் கூட போலீசில் புகார் செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு சேகரிக்கப்பட்டவைதான். போலீசில் புகார் செய்யப்படாமல் மூடி மறைக்கபட்ட சம்பவங்கள் எத்தனை என்பது நமக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் சிலாங்கூர், ஜொகூர், கெடா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. அச்சம்பவங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker