Latestமலேசியா

ஆசிரியர் குடியிருப்பில் தீ: ஆசிரியை கருகி மரணம்

மீரி,ஜூலை.25- மூலு தேசிய பூங்காவில் உள்ள பத்து புங்கான் தேசிய பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 வயது ஆசிரியை ஒருவர் உடல் கருகி மாண்டார்.

தீ முற்றிலும் அணைத்து முடிக்கப்பட்ட பின்னர் அந்த ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இறந்தவர் கேத்தரின் ஜேனட் தாவி என அடையாளம் காணப்பட்டுள்ளது என மீரி தீயணைப்பு மீட்புப் படைத் தலைவர் லாவ் போ கியாங் தெரிவித்தார்.

இன்று விடியற்காலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட அத்தீவிபத்தில் இதர இரண்டு ஆசிரியைகள் தீக்காயங்களுக்கு ஆளாகினர். கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் அவர்கள் பின்னர் மீரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker