Latestஉலகம்

ஆட்டிப் படைக்கிறது காட்டுத் தீ! கிரேக்கத்தில் பேரிடர்! 85 பேர் பலி!

ஏதென்ஸ், ஜூலை.25- கிரேக்கத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ, மிகக் கடுமையாக பரவி மக்கள் வாழும் பகுதிகளைச் சுற்றி வளைத்துக் கொண்டதில் இதுவரை 85 பேர் வரை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 26 பேர் ஒரே குடியிருப்புக் கட்டடத்தினுள் சிக்கி தீயில் கருகி மாண்ட சம்பவம் கிரேக்க மக்களை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.

ஏதென்ஸ் நகருக்கு அருகே உள்ள மாட்டி கடற்கரைப் பகுதி, அதிகளவில் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீயிலிருந்து தப்பிக்க குடியிருப்புவாசிகளில் பலர் கடலில் குதிக்க நேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சுற்றிலும் பரவி வரும் தீயில் இருந்து தப்பிக்க ஒரே குடியிருப்புப் பகுதியில் ஒதுங்கிய போது அந்த 26 பேரும், அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என மீட்புப் படையினர் கூறினார். இவர்கள் பெரும்பாலும் நெருங்கிய உறவுனர்கள் என்றும் பலர் சிறார்கள் என்றும் தெரிய வந்த போது நாடே சோகத்தில் மூழ்கியது.

இந்தக் காட்டுத் தீயில் 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகளும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் தீயில் அழிந்தன. இதுவொரு தேசியப் பேரிடர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துலக நாடுகளின் உதவியை கிரேக்கம் கோரியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனங்களும் வாகனங்களும் மீட்புப்படை நிபுணர்களும் விரைந்துள்ளனர்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker