Latestமலேசியா

இடைத் தேர்தல்; மசீச- மஇகா மௌனம் ஏன்? –கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை.25- சுங்கை கண்டீஸ் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் அம்னோ உச்சமன்ற குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாமிற்கு மசீச மற்றும் மைகாவின் ஆதரவு உண்டா? என்று ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

அவர் மசீச மற்றும் மஇகா ஆகியவற்றின் ஆதரவில் தான் தேர்ந்தெடுக்கப் பட்டாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். லோக்மானின் தேர்வு குறித்து அவ்விரு கட்சிகள் எவ்வித ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ தெரிவிக்கவில்லை என்று லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

“ஏன் அவர்கள் மௌனம் சாதிக்கின்றனர்? சுங்கை கண்டீஸ் தொகுதியில் போட்டியிட லோக்மானுக்கு தகுதி இருக்கிறதா? என்பது குறித்து அவ்விரு கட்சிகளும் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை” என்று கிட் சியாங் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியின் ஆதரவில், அம்னோவின் சார்பில் லோக்மான் அத்தொகுதி யில் போட்டியிடுகிறார். தாம் மதவாதி அல்ல என்று லோக்மான் கூறியுள்ள போதிலும், அவர் பாஸ் கட்சியின் ஆதரவில் போட்டியிடுகிறார் என்பதை அறிந்தும் மசீச துணைத் தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூட எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் மசீசவை பிரதிநிதித்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும், அக்கட்சி அம்னோ வேட்பாளரை ஆதரிக்கிறது என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்டு 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், பிகேஆர் கட்சி சார்பில் ஸவாவி அகமட் முக்னி, சுயேட்சை வேட்பாளர் கே.மூர்த்தி மற்றும் லோக்மான் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker