Latestஉலகம்

உலகின் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் 3 இந்தியப் பெண்கள்!

நியூயார்க், ஜூலை.25-நாற்பது வயதுக்கு உட்பட்ட உலக அளவில் செல்வாக்குமிக்க தொழில்துறை நிர்வாகிகளின் 40 பேரின் பட்டியலை ஃபோர்ச்சுன் சஞ்சிகை வெளியிட்டது. அதில் 3 இந்திய பெண்மணிகள் உள்பட நால்வர் இடம்பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாக அதிகாரியான திவ்யா சூர்ய தேவரா இந்தப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

விமியோ நிறுவனத்தின் தலைமைச் செயல்நிலை அதிகாரியான அஞ்சலி சுத் 14ஆவது இடத்தையும் ரோபின் வுட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் இணைத் தலைமைச் செயல்நிலை அதிகாரியுமான பாய்ஜூ பட் 24ஆவது இடத்திலும் உள்ளனர்.

பிமைள் படுண்டர்ஸ் ஃபண்ட் நிறுவனத்தின் நிறுவனப் பங்குதாரரான அனு துகால் 32ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார். இந்தப் பட்டியலில் இன்ஸ்டாகிராம் நிறுவன இணை நிறுவனரான கெவின் சிஸ்ட்ரோம் (வயது 34) மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் (வயது 34) ஆகிய இருவரும் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker