Latestஉலகம்

தங்கத்தை விட அதிக விலை: இமயமலை வயாகாராவுக்கு!

காட்மண்டு, ஜூலை.25- ஒரு பொருள் அதிகமாக விலைக்கு போகிறது என்று தெரிந்தால் யாருக்குத் தான் அதை தேட மனம் வராது? அதுவும் அனைத்துலக சந்தையில் ஏகப்பட்ட கிராகி என்பதால், அதைத் தேடி குடும்பத்துடன் மக்கள் கூட்டமாக கிளம்புகிறார்கள் அந்தப் பொருளின் பெயர் “யர்சாகும்பா”.

பாரம்பரிய மருத்துவக் குணம் கொண்டது யர்சாகும்பா. சந்தையிலிருக்கும் கிராக்கியை விட இதற்கு கடும் கிராக்கி இருக்கிறது. இன்றைய தேதியில் யர்சாகும்பா. தங்கத்தை விட அதிக விலை மதிப்பு கொண்டது.

யர்சாகும்பா என்பது ஒரு வகை காளான் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். “இமயமலை வயாகரா” என்றும் இதனை அழைக்கின்றனர். சீனா தவிர சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கொரியா , மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் அனைத்துலக சந்தையில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது,

நேபாளம், பூடான், இந்தியா, ஆகிய இடங்களில் அமைந்துள்ள இமயமலைத் தொடரில் தான் யர்சாகும்பா காணப்படும். இமயமலைத் தொடரில் 3,300 அடி முதல் 4,000 அடி வரை உள்ள பகுதிகளில் தான் அதிகமாக காணப்படும் .

மழைக் காலத்துக்குப் பின்னர் ‘பங்கஸ்’ எனும் பூஞ்சை தாக்கத்தால் இறந்துபோகும். கம்பளி ப்பூச்சியிலிருந்து யர்சாகும்பா உருவாகிறது.
இறந்து போகும் கம்பளிப்பூச்சி மேல் வெப்பம் பரவும் போது யர்சாகும்பா வெளிவரத் துவங்கும்.

அந்நேரத்தில் அதைப் பறித்து விட வேண்டும். இல்லையெனில் மழைக்காலத்தில் முற்றிலும் நீங்கி விடும். இந்தக் காளானை தேடி நேபாளம்,இந்தியா, பூடான் ஆகிய பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் செல்கிறார்கள்.

இமயமலையின் உயரமான இடங்களில் குழுவாக சென்று சில மாதங்கள் அங்கே தங்கி அதனை சேகரித்து வருகின்றனர். இந்தக் காளான் சீசனில் நேபாளத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகின்றன.

யர்சாகும்பா காளானை பறிக்கச் செல்லும் ஒவ்வொரு மாணவனும் 1 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ளதால் அந்த பருவத்தில் குடும்பம் குடும்பமாக மலையேறுகிறார்கள். குழந்தைகள் இலகுவான மேடு பள்ளம் ஏறுவதால் வீட்டில் எந்தக் குழந்தையையும் விட்டு வைப்பதில்லை.

ஒரு கிலோ யர்சாகும்பா 30 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை ஆகிறது. அதன் அதிகமான அறுவடையாலும் பருவகால மாற்றத்தினாலும் அறுவடை குறைந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker