Latestமலேசியா

10 ரிங்கிட்டுக்கு ஒரு ஜோடி வெள்ளை காலணி!

சுங்கை கண்டிஸ்,ஜூலை.25- அடுத்தாண்டு தொடங்கி பள்ளி மாணவர்கள் வெள்ளி காலணிகளுக்கு பதிலாக கறுப்பு காலணிகளை அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்ததை அடுத்து, காலணி வியாபாரி ஒருவர் தன்னிடம் உள்ள வெள்ளை காலணிகளின் கையிருப்பை முடிப்பதற்காக ஒரு ஜோடி காலணியை 10 ரிங்கிட்டுக்கு மலிவாக விற்கத் தொடங்கியுள்ளார்.

இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சுங்கை கண்டிசில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் முன் லோரியில் வெள்ளைக் காலணிகளை அடுக்கி வைத்தவாறு அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அடுத்தாண்டு முதல் பள்ளி மாணவர்கள் கறுப்பு காலணிகளை அணிய வேண்டும் என கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் அறிவித்தது பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றது. எனினும், சில பெற்றோர்களின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு கறுப்பு காலணிகளை அணிய கால அவகாசம் வழங்க்கப்படும் என அவர் கடந்த சனிக்கிழமை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker