Latestமலேசியா

அன்னிய தொழிலாளர் பிரச்னை: நீண்டகால தீர்வு பிறக்குமா?

ஜொகூர் பாரு, ஜூலை.26- சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து, அரசாங்கம் நீண்டகால தீர்வை கண்டறிய வேண்டும் என்று சிறிய மற்றும் நடுத்தர நிறுவங்கள் சங்கத்தின் தலைவர் தே கீ சின் வலியுறுத்தினார்.

இந்தச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை செய்ய மலேசியர்கள் விரும்புவதில்லை என்றும், அந்தக் காரணத்தால் தான் அந்நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, ஜொகூர் பாருவில் உள்ள நிறுவன்ங்களில் வேலைச் செய்ய மலேசியர்கள் விரும்புவதில்லை. அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யவே விரும்புகின்றனர். வேறு வழியில்லாமல் தான், ஜொகூர் பாருவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன என்று கீ சின் சொன்னார்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதும், அதன் பின்னர், வேறு வழியில்லாமல், அவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதும் (மலேசியாவிற்கு) புதிதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் செயல் குறித்து கருத்துரைக்கையில், அவர் அவ்வாறு சொன்னார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவது எளிதல்ல. அதற்கு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஓர் ஆண்டு காலம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் உண்டு. அத்தனைக் காலம் காத்திருந்தால், நிறுவன்ங்கள் நஷ்டமடையும் என்று அவர் கூறினார்.

இதனிடையில், வெளிநாட்டு தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி, மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரண காரியமல்ல என்று ஜொகூர் இந்திய வணிகர் சங்கத்தின் தலைவர் பி.சிவகுமார் சொன்னார்.

அடிக்கடி சட்டங்கள் மாறினால், அது வணிகர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதகமாக அமையும் என்றும், அதன் அடிப்படையில், இது குறித்து நீண்ட கால தீர்வு காணப் பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker