Latestமலேசியா

இடைத்தேர்தல்: டுரியான் விருந்தா? பெர்சே 2.0 கண்டனம்

கோலாலம்பூர், ஜுலை.26-சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலின் பிகேஆர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி, இலவச டுரியான் வழங்கும் நிகழ்ச்சிக்கு Kohijrah எனப்படும் சிலாங்கூர் ஹிஜ்ரா கூட்டுறவுக் கழகம் ஏற்பாடு செய்திருந்ததை பெர்சே 2.0 மலேசியத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கண்டித்ததை அடுத்து அந்நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தகைய நிகழ்ச்சியை நடத்துவது லஞ்சத்துக்கு சமமானது என்றும் அது ஒரு தேர்தல் குற்றம் எனவும் அந்த அமைப்பு சாடியது.

இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்து போஸ்ட்டர் வெளியிட்டிருந்தது. ஆயிரம் இலவச டுரியான்கள் வழங்கப்படும் என்றும், பிகேஆர் வேட்பாளரும், சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அவ்விருவரும் அந்நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதிப்படுத்தவில்லை என Kohijrah கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker