Latestஇந்தியா

இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவீஸ் வங்கிக்கு வருவதில்லையா?

பெர்ன்.ஜூலை.26- பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை சுவிஸ் வங்கியில் மேற்கொள்ளப்படும் இந்தியர்களின் மூதலீடு 80 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்தியர்களின் கறுப்புப் பணம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுவிஸ்லாந்தில் உள்ள வங்கிகளில் முறைகேடாக பதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்தகவல் கடந்த 40 ஆண்டுகளாக  இந்தியாவில் பேசப்படுகிறது. எனினும் உறுதியான ஆதாரங்களோ நடவடிக்கைகளோ இதுவரை எடுக்கப்படவில்லை. 2014 ஆண்டு பிரதமராக பதவியேற்ற மோடி, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டெடுப்பேன் என உறுதி அளித்தார்.

இதற்கான பணிகளையும் அரசு தொடங்கியது. எனினும் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் பற்றி விரிவான விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் தற்போது சுவிஸ் அரசு சார்பாக இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் ஆன்ட்ரூஸ் பாம், மத்திய நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களில் கறுப்புப் பணம் பதுக்கி வைப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இது உண்மை அல்ல,பெரும்பாலான இந்திய தொழிலதிபர்கள் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்கி அந்தப் பணத்தை அப்படியே சுவிஸ் வங்கிகளுக்கு மாற்றிவிடுகிறார்கள்.

இதனால் இந்திய அரசுக்கும் உட்நாட்டு வங்கிகளுக்கும் இழப்பீடு ஏற்படும். சுவிஸ் வங்கிகளின் வர்த்தகம் அதிகரிக்கும். இதனை கறுப்பு பணம் என்று சொல்ல முடியாது. இத்தகைய பண முதலீடு கடந்த 4 ஆண்டுகளாக குறைய தொடங்கியுள்ளது.

குறிப்பாக மோடியின் பதவிக்காலத்தில், கறுப்பு பணத்திற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் சுவிஸ் வங்களில் செய்யப்படும் முதலீடு 80% குறைந்துள்ளது. மேலும் சுவிஸ் வங்கிகளில் முதலீடு
செய்துள்ள இந்தியர்களின் விவரத்தை கணக்கெடுத்து வெளியிடும் வகையில் கடந்த 2017 டிசம்பரில் 21ஆம் தேதி இரு அரசுகளுக்குமிடையே ஒப்பந்தம் நிறைவேறியுள்ளன.

அதன் அடிப்படையில் தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளோம். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி மோடியின் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றிகளில் முக்கியமானது என்று
பாஜக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker