Latestஇந்தியா

ஓடும் ரயிலில் புடவை சிக்கியது; மரணப் போராட்டத்தில் பெண்! -(VIDEO)

காஞ்சூர் மார்க், ஜூலை. 26- மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவரின் புடவை தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

## video source;lion news

மகாராஷ்டிரா மாநிலத்தில் காஞ்சூர்மார்க் ரயில் நிலையத்தில் இந்த பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. காஞ்சூர்மார்க் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் பெண் பயணி ஒருவர் இறங்கினார். ஆனால் அவரது புடவையின் முந்தானை ஒரு பகுதி ரயிலில் சிக்கிக் கொண்டுள்ளது.

ரயில் புறப்படவும் சிக்கிய புடவையுடன் அவர் தர தரவெனை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த ரயில்வே போலிஸ்காரர் ஒருவர் துரிதமாக செயல் பட்டு பெண்மணியை காப்பாற்ற முயற்சித்தார்.

ஆனால், ரயிலின் வேகத்திற்கு ஈடுதர முடியாமல் அவர் நடைபாதியிலேயே தடுமாறி விழுந்தார். அங்கிருந்த ரயில் பயணிகளும் அந்த பெண்மணியை காப்பாற்ற போராடினர்.

இதனிடையே துணிச்சல்மிக்க இளைஞர் ஒருவர் அந்த பெண்மணியை காப்பாற்றிள்ளார். இச்சம்பவத்தால் படுகாயமடைந்த அந்தப் பெண்மணி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker