Latestமலேசியா

பினாங்கு கடலில் சீன சரக்கு கப்பல் கவிழ்ந்தது

ஜோர்ஜ் டவுன்,ஜூலை.26- பினாங்கின் தெற்கே உள்ள பெர்மாத்தாங் டாமார் கடலில் சீனாவுக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று ஏற்கெனவே கடலில் மூழ்கிய சிமெண்டு கப்பலின் உடைந்த பாகத்தை மோதி கடலில் கவிழ்ந்தது.

விடியற்காலை மணி 5.30 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் கப்பலில் இருந்த பணியாளர்கள் யாருக்கும் ஏதும் ஆகவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவ்விபத்தால் ஏற்பட்ட பொருட்சேதத்தின் மதிப்பு 35 லட்சம் ரிங்கிட் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பினாங்கு தீவிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த சிமெண்ட் கப்பலை அலைகள் குறைவாக இருக்கும்போதுதான் பார்க்க முடியும் என தெரிகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker