Latestமலேசியா

மக்களவைக் கூட்டத்திற்கு வராத எம்பிக்களின் பணப்படியை வெட்டலாம்- மக்கள்

கோலாலம்பூர்,ஜூலை.26- மக்களவைக் கூட்டத்திற்கு வரத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணப்படியை வெட்ட வேண்டும் எனும் பரிந்துரையை பொதுமக்கள் அதிகமானோர் வரவேற்றுள்ளனர்.

மலேசியாகினி கோலாலம்பூரிலும் சிலாங்கூரில் உள்ள பொதுமக்களைப் பேட்டிக் கண்டதில், மக்களவைக் கூட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவை அவர்கள் முக்கியமானதாகக் கருதுவது தெரிய வந்தது. அதனால், மக்களவைக் கூட்டத்திற்கு வரத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணப்படியை வெட்ட வேண்டியதுதான்; சரியாக காரணம் இருப்பின் பரவாயில்லை என்று மக்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டுச் செல்வதற்காகத்தான் மக்கள் ஓட்டுப் போட்டு தங்களின் பிரதிநிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை மனத்தில் நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவைக் கூட்டத்திற்குச் செல்வதை தலையாய கடமையாக எண்ண வேண்டும் என மக்களில் சிலர் கூறியுள்ளனர்.

மக்களவைக் கூட்டத் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து, மக்களவை அமர்வுகளுக்கு வருகைப் புரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்த விவகாரம் நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதை அடுத்து, அத்தகைய பொறுப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணப்படியை வெட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டான்ஶ்ரீ ராயிஸ் யத்திம் நேற்று முன்தினம் பரிந்துரைச் செய்திருந்தார்.

அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களை பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அப்பரிந்துரைக்கு விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல் அமைச்சர் சாலாஹுடின் அயூப்பும் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker