Latestமலேசியா

‘விளையாட்டுக்குத்தான் சொன்னேன்! மன்னித்துவிடுங்கள்!’- அனுவார் மூசா

கோலாலம்பூர், ஜூலை.26- லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் கூடிய விரைவில் இடைத் தேர்தல் நடக்கும் என்று கிண்டலடித்தமைக்கு அம்னோவின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசா இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

“இடைத்தேர்தல் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், லங்காவியிலும் இடைத்தேர்தல் நடக்கலாம் என விளையாட்டுக்குத்தான் சொன்னேன்; கோபப் படாதீர்கள்” என அவர் கூறியுள்ளார். தாம் விளையாட்டாகக் கூறியதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் ஆதரவாளர்களும் தவறாக எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருவேளை தாம் விளையாட்டாகச் சொன்ன அக்கூற்று யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதனிடையே, லங்காவியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கலாம் என அனுவார் சொல்லி இருக்கக் கூடாதென பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகிரிஷ் மகாதீர் கருத்துரைத்திருந்தார். 93 வயதாகும் ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழலாம் என்று சொல்லியிருந்தார்.

முக்ரிஷின் அந்த கருத்தை ஏற்றுக்கொண்ட அனுவார், லங்காவி எம்பியான துன் மகாதீரைப் போலவே தனக்கும் ஆயுள் காலம் அதிகம் இருக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறியுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker