Latestசினிமா

வெளிநாட்டு பெண்ணுடன் ‘கேப்டனின்’ புதல்வர்! வைரலாகும் படங்கள்!

சென்னை, ஜூலை.26- நெதர்லாந்தில் கடந்த 7 மாதங்கள் படப்படிப்பில் கலந்து கொண்ட விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், தற்போது இந்தியா திரும்பி விட்டாலும் தனது நெதர்லாந்து தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

நெதர்லாந்துக்கு சென்றிருந்த போது இவருக்கு அந்நாட்டு பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரை தனது உயிர்த்தோழி எனக் கூறி கொள்கிறார் சண்முகபாண்டியன்.

அவரது பிறந்த நாளன்று,  தன் தோழிக்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வாழ்த்து கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி தன் வாழ்நாளிலே சிறந்த நாள்கள் என்று நெதர்லாந்தில் வாழ்ந்த 7 மாத காலத்தை குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கான விழாவில் கலந்து கொள்ளாமல் நெதர்லாந்திலிருந்து அவருக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தது குறிப்படத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker