Latestமலேசியா

PTPTN கடன் பெற்றவர்கள் சுய விவரம்: ஜூலை 31-வரை அவகாசம்

கோலாலம்பூர்,ஜூலை.26-  பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் கடனைப் பெற்றுள்ளவர்கள் அவர்களது சுய விவரங்களை வழங்க ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும்.

இது உயர்கல்வி நிதிக் கடன் கொண்டவர்களையும் அதனைத் திரும்பி செலுத்துபவர்களையும் உள்ளடக்கியது என தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

உயர்கல்வி நிதிக் கடனைப் பெற்றவர்கள் தங்களுடைய வேலை, வருமானம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தொடர்பான தகவல்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் தருமாறு அவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார் அது தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடன் பெற்றவர்கள் தங்களது சுய விவரங்களை வழங்கினால் மாதத்திற்கு 4,000க்கும் கீழ் வருமானம் பெறுபவர்களை அடையாளம் காண இயலும். தங்களது சுய விவரங்களை வழங்கத் தவறும் உயர்கல்வி நிதிக் கடனாளிகள் அவர்களது கடனை தாமதமாகத் திருப்பி செலுத்த விரும்பவில்லை என்று புரிந்து கொள்ளப்படும்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker