Latestமலேசியா

‘அண்ணன்’ ஸாஹிட் ஹடிமி- ‘தம்பி’ கேசவன்; மக்களவையில் ஆரவாரம்! (video)

கோலாலம்பூர்,ஜூலை.27- வழக்கமாக மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுக்கு ஆள் காரசாரமாக வாதம் புரிந்து கொள்வதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் நேற்றைய மக்களவையில் வழக்கத்துக்கு மாறாக, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் “தமயன்”, “தம்பி” என்று ஒருவரை ஒருவர் அழைத்து அவையை கலகலப்பாக்கினார்கள்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் பேரரசரின் உரை மீதான தமது விவாதத்தைத் தொடங்கியபோது எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடியை அண்ணன் என்று அழைத்து வணக்கம் சொன்னார். ஸாஹிட் ஹமிடியின் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள ஊத்தான் மெலிந்தாங்கில் முன்பு கேசவன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்த உறவின் அடிப்படையில் தாம் ஸாஹிட்டின் தம்பி ஆனதாக கேசவன் குறிப்பிட்டார்.

அதைக் கேட்டுப் பூரித்துப் போன ஸாஹிட் உடனே எழுந்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்கு கேசவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும்,”நீங்கள் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது உங்களுக்கும் சரிசமான மரியாதையையே வழங்கி இருக்கிறேன். அந்த நன்றி உணர்வு உங்களுக்கு இருக்கிறதா, தம்பி?” என்று ஸாஹிட் கேசவனை கிண்டலாகக் கேட்டார்.

அதற்கு,”பாகான் டத்தோ அண்ணா,நான் சுங்கை சிப்புட்டுக்குச் சென்றுவிட்டாலும் பாகான் டத்தோ இன்னும் எனது மனதுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது. இவ்வேளையில் உங்களுக்கு நன்றிச் சொல்லிக் கொள்கிறேன்” என கேசவன் பதில் உரைத்தார்.

இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதையான வாதம், துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கின் பாராட்டௌதலைப் பெற்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker