Latestஇந்தியா

கருணாநிதியின் உடல்நிலை நலிவு: இல்லத்தில் தலைவர்கள் குவிந்தனர்

சென்னை, ஜூலை, 27- திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் நலிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அவரது இல்லத்தில் கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் முக்கிய அதிமுக அமைச்சர்கள், நடிகர் கமலஹசான் உள்பட பலரும் கருணாநிதியின் இல்லத்திற்கு விரைந்தனர். ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர்கள் நலம் விசாரித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலை குறித்து பல்வேறு யூகச் செய்திகள் பரவியுள்ளன. அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் இப்போது கொஞ்சம் தேறி வருவதாகவும் அவர் நல்ல உடல் நலனுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் நன்றாக இருப்பதாக ஸ்டாலின் சொன்னார். கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். அவரது உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். விரைவில் பூரண குணமடைவார் என்று ஸ்டாலின் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker