Latestஉலகம்

சிங்கைப் பிரதமரின் மனம் கவர்ந்த தமிழ்ப் பாடல்-(VIDEO)

சிங்கப்பூர், ஜூலை.27- சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மெட்லி பாடல் ஒன்றினை பகிர்ந்துள்ளார். சிங்கப்பூரில் “முன்னேறு -வாலிபா” எனத் தொடங்கும் தமிழ்ப்பாடல் தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

“முன்னேறு வாலிபா.., முன்னேறு, என்றும் தொடுவானம் நோக்குவாய்” என்ற இந்தப் படலை கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலுள்ள அனைத்து  பள்ளிகளிலும் அந்நாட்டின் தேசிய அணி வகுப்பின் போதும் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னேறு வாலிபா மற்றும் சிங்கை நாடு என இரண்டுப் பாடலையும் கப்பேலா இசைக் குழுவினர் உருவாக்கி உள்ளனர். 6 இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல் சிங்கப்பூர் பிரதமரை கவர்ந்துள்ளது.

முன்னேறு – வாலிபா – வாலிபா
முன்னேறு- வாலிபா- முன்னேறு
என்றும்- தொடுவாய் நோக்குவாய்
கண் தெரியாத கார் இருளில்
ஒளிரும் விண்மீனே
முன்னேறு -வாலிபா
முன்னேறு- வாலிபா
முன்னேறு -முன்னேறு
முன்னேறு -முன்னேறு
முன்னேறு- வாலிபா- முன்னேறு

-என்ற இந்தப் பாடலை கேட்பதற்கு மிகவும் இனிமையான பாடல் என தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார் சிங்கைப் பிரதமர் லீ சியென் லூங்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker