Latestமலேசியா

பிகேஆர் உதவித் தலைவர் பொறுப்புக்கு 7 இந்தியர்கள் போட்டியா?

கோலாலம்பூர், ஜூலை.27- அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் கட்சித் தேர்தலில், அக்கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு ஏழு இந்தியத் தலைவர்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர், நில, இயற்கைவள அமைச்சரும் பிகேஆர் நடப்பு உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அப்பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக மீண்டும் இம்முறை போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.சிவராசாவும், கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.சண்முகமும் அப்பதவிக்குப் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், சுங்கை சிப்புட் எம்பி எஸ்.கேசவன், சுபாங் ஜெயா நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் மைக்கல் தமிழ், பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி.பாலசுப்ரமணியம், டத்தோ கே.ராமசந்திரன் ஆகியோரும் இந்த பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker