Latestஉலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே முறுகல்! மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா?

வாஷிங்டன், ஜூலை.28- ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கி உள்ளது அமெரிக்கா. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:-

ஈரான் அதிபரான ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கும் விதமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஈரான் அதிபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இனி எந்தக் காலத்திலும் ஈரான் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால் , வரலாற்றில் இதுவரை சந்தித்திடாத பேரழிவை சந்திக்க நேரிடும் . உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்  கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும் மரணத்தையும் தான் ஏற்படுத்தும்.

எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்அமெரிக்க அதிபரின் குறித்த சவாலை ஏற்றக்கொள்ளும் வகையில், ஈரானைத் தாக்க அமெரிக்கா முயற்சி செய்தால். அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

டிரம்ப் போரை தொடங்கிளால் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் என்று மேஜர் ஜெனரல் கசிம் ஏற்றுள்ளதாக ஈரான் நாட்டின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு நாட்டுக்குமான வார்த்தப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா என்ற அச்சத்தில் உலக மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker