Latestமலேசியா

மசீச தேசியத் தலைவராக சுவா மீண்டும் வருவாரா?

ஈப்போ,ஜூலை.28-நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மசீச மிக மோசமான பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, தங்களின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் சுவா சொய் லெக் இருந்திருந்தால் கட்சி இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என உறுப்பினர்கள் பலரும் கருதுகின்றனர். அதனால், சுவா வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

எனினும், சுவா தனது அரசியல் திட்டம் குறித்து எதுவும் பேசாமல் மெளனம் காத்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஈப்போ பாராட் பிரிவுத் தலைவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலுக்கு பிறகு தங்களைச் சந்தித்த சுவா தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார் அவர். மாறாக, பொதுத்தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து சுவா வருத்தம் தெரிவித்ததாக அந்த தலைவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில், மசீச ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியையும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் தான் வெற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓர் ஆபாச காணொளி விவகாரத்தில் சிக்கி பதவியை விட்டு விலகியவர்தான் சுவா சொய் லெக். ஆனால் அதை தவிர சுவா கட்சியில் நல்ல தலைவராகத்தான் இருந்தார். அவரது தலைமைத்துவத்தில் கட்சி சிறப்பாக இருந்ததாக அக்கட்சி உறூப்பினர்கள் பலரும் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

சுவா மீண்டும் தலைவரானால் கட்சி மீண்டும் சரியான தடத்தில் பயணிக்குமென அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker