Latestஇந்தியாஉலகம்

மனைவியை கைவிட்டு தலைமறைவாகும் வெளிநாடு வாழ் கணவர்களை தண்டிக்க இணையத்தளம்

டில்லி, ஜூலை. 28-  வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்து கொண்ட பின் மனைவியை கைவிட்டு கணவர்கள் தலைமறைவாவது, மனைவியை உடல் ரீதியாக அல்லது  மன ரீதியாக துன்புறுத்துவது போன்ற குற்றங்களை தடுக்க புதிய முயற்சியை இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தவறிழைக்கும் வெளிநாடு வாழ் கணவர்களுக்கு எதிராக சம்மன் மற்றும் வாரண்ட் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு ஏதுவாக  இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கத் தவறுபவர்களை  தலைமறைவு மோசடியாளர் என அறிவித்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டத்துக்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சு மற்றும் மாநில சட்டப்பேரவைகள் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2015 ஜனவரி முதல் 2017 நவம்பர் வரையில் வெளிநாடு வாழ் கணவர்களால் பாதிக்கப்பட்டதாக இந்தியப் பெண்கள் அளித்திருக்கும் மொத்தப் புகார்களின் எணணிக்கை 3.328 என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் திருமணத்துக்கு பின் தலைமறைவாகுவது, உடல் ரீதியா அல்லது மன ரீதியாக துன்புறுத்துவது போன்ற குற்றங்களை தடுக்க உதவும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் முறைகேட்டில் ஈடுபட்ட நபரின் குறிப்பிட்ட சொத்தை தமக்கு சொந்தமாக்கித் தரவேண்டும் அல்லது அதே சொத்தை விற்க தமக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அதனை அரசு செயல் படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தை செயல்படுத்தும் வகையிலான சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த மசோதா தாக்கலாகும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ்  தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker