Latestமலேசியா

மலாய்-முஸ்லிம் பேரணிக்கு அம்னோ, பாஸ் ஆதரவு

கோலாலம்பூர்,ஜூலை.28- நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மலாய் சமூகத்தினருக்கும், இஸ்லாம் சமயத்திற்குமான உரிமைகள் அழிக்கப்படும் அபாயத்தில் இருப்பதால், அவற்றை தற்காப்பதற்காக சுமார் 300 மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளும் 3000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் ஒன்று கூடினர்.

அப்பேரணியில், அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சரும், பக்கத்தான் ஹராப்பானைச் சேர்ந்த பெர்சத்து உறுப்பினருமான ரயிஸ் யாத்திமும் இணைந்து கொண்டார்.

கோலாலம்பூர், கம்போங் பாரு, சுல்தான் சுலைமான் கிளப்பில் இன்று காலை நடைபெற்ற அந்தப் பேரணியின்போது மழை பெய்தபோதும், அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.

தங்களின் சமூகத்துக்கும் சமயத்திற்கும் எதிராக பாயும் விவகாரங்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker