Latestஉலகம்

வரிக்குதிரையைப் போல் மாறுவேடம் போட்ட கழுதை!

கெய்ரோ,ஜூலை.28- கழுதைக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள மிருகக்காட்சி சாலை  ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

உடல் முழுதும் கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, தாங்கள் அவ்வாறு வரையவில்லை என்று அந்த மிருகக்காட்சி சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இண்டர்நேஷனல் கார்டன் என்ற அந்த மிருகக் காட்சி சாலைக்குச் சென்ற மஹ்மூத் சர்ஹான் எனும் மாணவர் பேஸ்புக்கில் அந்தப் படத்தை வெளியிட்டதை அடுத்து இந்த செய்தி பரவலானது.

கூண்டுக்குள் இருந்த இரண்டு விலங்குகளுக்கும் உடலில் மை பூசப்பட்டு இருந்ததாக சர்ஹான் கூறியுள்ளார்.சிறிய உருவம், கூரிய காதுகள் உடைய கழுதை என்று கருதப்படும் அந்த விலங்கின் முகத்திலும் கருப்பு மை பூசப்பட்டுள்ளது அந்தப் படத்தின்மூலம் தெரிய வந்துள்ளது. படத்தில் உள்ள அந்த விலங்கு கழுதையா, வரிக்குதிரையா என்று விலங்கியல் நிபுணர்கள் சிலரும் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், அது உண்மையான வரிக்குதிரைதான் என்று அப்பூங்காவின் இயக்குநர் முகமது சுல்தான் கூறியுள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker