Latestமலேசியா

கை, கால் வாய்ப்புண் நோய்: 2 வயது குழந்தை மரணம்!

கூச்சிங், ஜூலை.29- தற்போது கடும் சுகாதார மிரட்டலாக உருவாகி வரும் கை, கால் மற்றும் வாய்ப்புண் நோய்க்கு முதன் முறை இரண்டு வயதுக் குழந்தை சரவாவில் பலியாகி இருக்கிறது.

முக்காவிலுள்ள கம்போங் பாங்டிரே என்ற இடத்தில் 2 வயது 5 மாதங்களே நிரம்பிய அந்தக் குழந்தைக்கு ஜூலை 24 ஆம் தேதி கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டு கை, கால் மற்றும் வாயில் புண் உருவானதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிசாம் தெரிவித்தார்.

அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் அது கை கால், வாய்ப்புண் தாக்கம் என சந்தேகிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாள்களுக்கு அடுத்து குழந்தையின் உடல்நிலை கடுமையானதைத் தொடர்ந்து சிபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் அது ஜூலை 28ஆம் தேதி காலை இறந்து விட்டது என்று டத்தோ நோர் ஹிசாம் சொன்னார்.

குழந்தையின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

குழந்தைகள் விஷயத்தில் பொதுமக்கள் மிகக் கவனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, குழந்தைகள் கழிவறைகளைப் பயன்படுத்திய பின்னர் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவி விடவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker