Latestஉலகம்

மேகன் மார்க்கலுக்கு அரச குடும்பத்தில் தடைக்கு மேல் தடை!

லண்டன், ஜூலை. 29- பிரிட்டன் அரச குடும்பத்திற்கான உணவு பட்டியலில் மேகன் மார்க்கலுக்கு பிடித்த உணவுகளுக்கு தடை விதித்துள்ளார் எலிசபெத் அரசியார்.

பிரிட்டன் இளவரசர் ஹர்ரியை திருமணம் செய்து கொண்டதிலிருந்து மேகன் மார்க்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரச குடும்பம் விதித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அவருக்கு பிடித்த உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரச சமையல்காரர் கூறுகையில், அரச குடும்பத்திற்கான உணவு பட்டியலில் கார்போஹெட்ரேட் மிகுதியாய் உள்ள உணவுகளுக்கு அரசியார் தடை விதித்துள்ளார்.

அதன்படி அரிசி, உருளைக் கிழங்கு மற்றும் பாஸ்தா போன்ற உணவுகள் இனி அரசு குடும்பத்திற்கு பரிமாறப்படும் உணவுகளில் இடம் பெறாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியார் வாழைப்பழம் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார். எப்பொழுதம் வாழைப்பழத்தின் நுனி பகுதிகளை வெட்டி எறிந்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கியதையே அவர் உட்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு தனியார் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மார்க்கல், பாஸ்தா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்க்கலிக்கு அடுத்தடுத்து பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உறங்க செல்வதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் என அரசியாரின் செயலாளர் வில்லியம்  சொன்னார்.

இது பற்றி அவர் கூறுகையில், அரசியார் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் யாரும் உறங்க செல்ல மாட்டார்கள் என்பது அரச மரபு. ஆனால் மார்க்கல் உறங்க செல்வதில் சிறிது மாற்றம் செய்ய வேண்டியுள்ளது எனக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker