Latestவிளையாட்டு

லீ சோங்கிற்கு தைவானில் சிகிச்சை: விடைபெறும் காலம் வந்துவிட்டதா?

கோலாலம்பூர், ஜூலை 29- மலேசியாவின் பேட்மிண்டன் சூப்பர் ஸ்டாரான டத்தோ லீ சோங் வெய், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைக் காரணமாக தைவானில் சிகிச்சை பெறச் செல்லும் நிலையில், அவரது பேட்மிண்டன் எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டது.

35 வயதுடைய மூத்த வீரரான லீ சோங் வெய் தொடர்ந்து, பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தவல்கள் வெளியாகி இருப்பது, மலேசிய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தான் பிரசித்திபெற்ற இந்தோனிசிய பொதுப் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை லீ சோங் வெய் வாகை சூடினார்.

சீனாவில் நடைபெறும் உலகச் சாம்பியன் போட்டிக்கும் ஆசியா விளையாட்டுப் போட்டிக்கும் தயாராகி வந்த வேளையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த லீசோங் வெய், தற்போது சிகிச்சைக்காக தைவான் செல்கிறார். இந்தச் சிகிச்சை, சற்று நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதால் லீ சோங் வெய் மீண்டும் பேட்மிண்டன் களத்திற்குத் திரும்புவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker