Latestஉலகம்

காஸா மனிதாபிமான கப்பலை இஸ்ரேல் கடத்தியது!

கோலாலம்பூர், ஜூலை.30- மனிதாபிமானச் சேவையை முன்னிட்டு அல் அவ்டா என்ற கப்பலில் காஸா நோக்கி புறப்பட்டுச் சென்ற கப்பலை, அனைத்துலக கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மடக்கி கடத்தியதாக தெரிய வந்துள்ளது.

22 பேர் இந்தக் கப்பலில் உள்ளனர். இவர்கள் பாலஸ்தீன விடுதலைக்கான செயல்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் மலேசியாவைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மட் அபாண்டி சாலேவும் இடம் பெற்றுள்ளனர்.

அனைத்துலக கடல் பகுதியில் அல் அவ்டா கப்பலையும் அதில் இந்த செயல்பாட்டாளர்களையும் கடத்துவதற்கு இஸ்ரேலிய இராணுவத்திற்கு எத்தகைய உரிமையும் கிடையாது என்று ‘மை கேர்’ எனப்படும் மலேசிய மனிதாபிமான அமைப்பின் தலைவரான இணைப் பேராசிரியர் டாக்டர் ஹபிட்ஸி கூறினார்.

அனைத்துலக விதிமுறைகளை மீறி இஸ்ரேல் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது அனைத்துலக கடல் மார்க்கமாக காஸாவுக்கு செல்வதை தடுக்க இஸ்ரேலுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார் அவர்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker