Latestமலேசியா

குலா பதவி விலக வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு நெருக்குதல்

கோலாலம்பூர்,ஜூலை.30- மலாய்க்காரர்களை வந்தேறிகள் என்று சொன்ன மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டுமென அம்னோ இளைஞர் பிரிவு நெருக்குதல் அளித்துள்ளது.

குலாவின் அத்தகைய கூற்று நாட்டில் இன உணர்வுகளைத் தூண்டிவிடும் விதமான கூற்று என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கி சாடினார். நாட்டின் அமைதிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான கூற்றை வெளியிட்ட குலா பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது சட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டார். குலா பதவி விலகவில்லை என்றால் பிரதமர் அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, அம்னோ இளைஞர் பிரிவு டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் குலா மீது போலீஸ் புகார் அளித்தது. நாடு முழுவதுமுள்ள அம்னோ இளைஞர் பிரிவினரும் குலா மீது போலீசில் புகார் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் நீலாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தமிழில் உரையாற்றிய குலா, மலாய்க்காரர்களை வந்தேறிகள் எனக் குறிப்பிட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அக்குற்றச்சாட்டை மறுத்த குலா இன்று அது தொடர்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker