Latestமலேசியா

எம்.ஆர்.டி-3 திட்டம்: கைவிடப் படவில்லை! -அமைச்சர்

கோலாலம்பூர், ஜூலை.31- எம்.ஆர்.டி -3  திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர தான் வைக்கப் பட்டுள்ளது. அது கைவிடப் படவில்லை என்று போக்குவரத்து அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் கடன் தொகை அதிகமாக உள்ளதால், அத்திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

ஜாலான் டூத்தா, செத்தியா வங்சா, பண்டார் மலேசியா மற்றும் கெரிஞ்சி ஆகிய பகுதிகளை இணைக்கும் 40 கி.மீ தூரம் கொண்ட அத்திட்டம், ரிம.50 பில்லியன் செலவில் உருவாகவிருக்கிறது.

“கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றி இத்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. அந்நகரின் அடியில், அதாவது சுரங்கப் பாதைத் திட்டமாக இது செயல்படவிருக்கிறது. அதனால், இதற்கு குறைந்த பட்சம் ரிம.50 பில்லியன் தொகை செலவிடப் பட வேண்டும்.

“இந்தத் திட்டத்தால் மக்களுக்கு நன்மைகள் ஏற்படும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதே சமயம், நாட்டின் கடன் நிலைமையையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உண்டு” என்று அந்தோணி லோக் சொன்னார்.

அத்திட்டத்தின் செலவுத் தாக்கங்கள் குறித்து எம்.ஆர்.டி கோர்ப் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில், பேருந்து சேவைகள் மற்றும் தொடர்ச்சியான கே.டி.எம் இரயில் சேவைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையில், புறநகரில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில், அப்பகுதிகளுக்குப் பேருந்து சேவை வழங்கப்படும் என்றும், ஆண்டு தோறும் பொது போக்குவரத்தை பெற்றுக் கொள்ள அப்பகுதி வாழ் மக்கள், ரிம.100 வெள்ளியை செலுத்தி, பொது போக்குவரத்திற்கான ‘பாஸ்’ பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker