Latestமலேசியாவிளையாட்டு

மலேசிய கால்பந்து அணியை “நாய்” என்பதா? FAM கடும் ஆட்சேபம்! (video)

கோலாலம்பூர்,ஜூலை.31- இந்தோனேசியா, சுராபாயாவில் தாய்லாந்தும் மலேசியாவும் சந்தித்துக் கொண்ட 16 வயதுக்குட்பட்ட விளையாட்டாளர்களுக்கான கால்பந்து போட்டியின்போது, மலேசிய அணியினரை பார்த்து குறிப்பாக விளையாட்டாளர் அமீரூலை “நாய்” என்று இந்தோனெசிய இரசிகர்கள் அவமதித்ததை அடுத்து, FAM எனப்படும் மலேசிய கால்பந்து சங்கம் ஆசியான் காற்பந்து சங்கத்துக்கும் ஆசிய காற்பந்து சங்கத்துக்கும் ஆட்சேப கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த போட்டிக்கு போகும் முன்னதாக, அமிரூல் தனது இன்ஸ்தாகிராம் பக்கத்தில் மலேசிய அணியின் படத்தை பதிவேற்றம் செய்தது மட்டுமின்றி இந்தோனேசியாவின் தவறான தேசியக் கொடிப் படத்தை பதிவேற்றம் செய்து விட்டார். எனினும், தவறைக் கண்டறிந்ததும் அந்தப் படத்தை உடனடியாக எடுத்துவிட்டு இந்தோனேசியர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அமிரூல் மன்னிப்புக் கேட்டும், அவரையும் மலேசியர்களையும் அவமதிக்கும் விதமாக இந்தோனேசிய இரசிகர்கள் “மலேசியன்ஸ் ஆர் டோக்ஸ்”. “அமிரூல் இஸ் டோக்” என கூச்சலிட்டனர்.

இதே போன்று வரும் வெள்ளிக்கிழமை மலேசிய அணி புருணை அணியைச் சந்திக்கும்போதும் நடக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக மலேசிய கால்பந்து சங்கம் சம்பந்தப்பட்ட ஆட்சேபக் கடிதத்தை அனுப்பியதாக அதன் தலைமைச் செயலாளர் ஸ்டுவார்ட் ராமலிங்கம் தெரிவித்தார். மலேசிய வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அக்கடிதம் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker