Latestமலேசியா

அசுத்தமான உணவகங்கள்: பினாங்கு அரசு நடவடிக்கை!

ஜோர்ஜ் டவூன், ஆக.1- உணவக உரிமையாளர்கள், தங்களின் உணவகங்களில் சுத்தம் பேணப் படுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, அவர்களின் உணவகங்கள் மூடப் படும் என்று பினாங்கு மாநில அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

“பினாங்கு மாநில அரசாங்கத்திடம் ‘விளையாடாதீர்’!” என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.
அம்மாநிலத்தின் இதுவரை 1,300 உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அத்துமீறியுள்ளன. சுகாதார மீறல்களை மாநில அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்று அவர் கூறினார்.

அந்த உணவகங்களில் 20 உணவகங்கள் மூடப் பட்டுள்ளன. 991 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் டிராப் பொருத்தாத குற்றத்திற்காக 266 உணவக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது என்று ஜக்தீப் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில், பினாங்கு மாநிலத்தில் 12 உணவகங்கள் மாநில அமைச்சால் மூடப்பட்டன. ஜோர்ஜ் டவூனில் உள்ள பிரசித்தி பெற்ற நாசி கண்டார் உணவகமும் சுகாதார விதிமுறையை பின்பற்றாத காரணத்திற்காக இரண்டு வாரங்களுக்கு இழுத்து மூடப் பட்டது.

அம்மாநிலத்தின் உணவகங்களில், சுத்தம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அசுத்தமான உணவகங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker